Jump to content

TA/750801b உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் நியூ ஆர்லியன்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கிருஷ்ணர் பசுக்கள் மற்றும் கன்றுகளின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார், சில விஷயங்கள் தெளிவற்றதாக இருந்தாலும். இதுதான் அங்கிருந்த முறை. அவர் நாள் முழுவதும் கன்றுகளுடன் வெளியே சென்று, மற்ற சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டும், பசுக்களைப் பராமரித்துக்கொண்டும் இருப்பார், பின்னர் மாலையில் வீடு திரும்புவார். அப்போது அன்னை யசோதை அவரைத் தூய்மைப்படுத்தி, குளிப்பாட்டி, நல்ல உணவைக் கொடுப்பார். உடனே அவர் தூங்கச் சென்றுவிடுவார். ஆனால் கிருஷ்ணர் மிகவும் சமர்த்தர் (புத்திசாலி). இரவு நேரத்தில் அவர் கோபியர்களிடம் சென்றுவிடுவார். (சிரிப்பு) அன்னை யசோதைக்கு இது தெரியாது; "என் நல்ல மகன் தூங்கிக்கொண்டிருக்கிறான்" என்றுதான் அவள் நினைத்தாள். கோபியர்களும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து, அவர்கள் அனைவரும் சேர்ந்து நடனமாடுவார்கள். இதுதான் வாழ்க்கை என்று அழைக்கப்படுகிறது, அதாவது அவரது குழந்தைப்பருவ வாழ்க்கை.மேலும் அவர் வளர்ந்த பிறகு, அவர் மதுராவிற்கு அழைத்து வரப்பட்டார்—நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், அங்கு அவர் தனது தாய்மாமனுடன் சண்டையிட்டு, அவனைக் கொன்றார். அதன் பிறகு அவருடைய தந்தை வசுதேவர் அவரைப் பராமரித்து, சாந்தீபனி முனியிடம் அனுப்பி வைத்தார். அங்குக் கிருஷ்ணர் கல்வி கற்றார். அவர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடத்தைக் கற்றுக்கொண்டிருந்தார். பின்னர் அவர் துவாரகைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பல ராணிகளைத் திருமணம் செய்து கொண்டு அரசரானார். கிருஷ்ணரின் வாழ்க்கையில், அவர் எப்போதும் சுறுசுறுப்பாகவும் பிஸியாகவும் இருக்கிறார். கிருஷ்ணரை நீங்கள் ஒருபோதும் சும்மா இருக்கக் காண முடியாது... அவரது வாழ்க்கையின் ஆரம்பத்திலிருந்தே அவர் பூதனை, அகாசூரன், பகாசூரன் ஆகியோரைக் கொல்வதில் பிஸியாக இருந்தார். அவருடைய நண்பர்களோ அவர் மீது முழு நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அவர்கள் அகாசூரனின் வாய்க்குள் நுழையும் போதுகூட: "ஓ, கிருஷ்ணர் அங்கே இருக்கிறார். அவர் அவனைக் கொன்றுவிடுவார்" என்று நினைத்தார்கள். இதுதான் பிருந்தாவனம்."
750801 - உரையாடல் - நியூ ஆர்லியன்ஸ்