TA/750801 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூ ஆர்லியன்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "இறக்கும் தருவாயில், நீங்கள் எதை நினைக்கிறீர்களோ, அந்த உடலையே நீங்கள் பெறுகிறீர்கள். அதுதான் இயற்கையின் விதி. பிரகிருதே... 'யம் யம் வாபி ஸ்மரன் பாவம் த்யஜத்யந்தே கலேவரம்'(ப.கீ 8.6 (1977)) என்று கிருஷ்ணர் கூறுகிறார். எனவே, நாம் நம்முடைய பாவங்களை, அதாவது நம் எண்ணங்களை பயிற்சிவிக்க வேண்டும். நாம் எப்போதும் கிருஷ்ணரைப் பற்றிய சிந்தனையிலேயே இருந்தால், இயற்கையாகவே மரணத்தின் போது நாம் கிருஷ்ணரை நினைவுகூர முடியும். அதுவே வெற்றியாகும்.அதன் பிறகு உடனடியாக, 'த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மாம் ஏதி' (ப.கீ 4.9 (1977)). உடனடியாக நீங்கள் கிருஷ்ணலோகத்திற்கு மாற்றப்படுகிறீர்கள். உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப, நீங்கள் கோபியர்களில் ஒருவராகவோ, கோபால சிறுவர்களில் ஒருவராகவோ அல்லது பசுக்கள் மற்றும் கன்றுகளில் ஒன்றாகவோ ஆகிவிடுகிறீர்கள். அவர்கள் அனைவரும் சமமானவர்கள். அங்கே எந்த ஒரு... அதுதான் ஆன்மீக உலகம். இங்கே மனிதன், பெண், பசுக்கள், மரங்கள் அல்லது மலர்களுக்கு இடையே வேறுபாடு உள்ளது. ஆனால் ஆன்மீக உலகத்தில் அப்படிப்பட்ட வேறுபாடு எதுவும் இல்லை.மலரும் ஒரு பக்தர்தான், உயிர் உள்ளவர். அந்த மலர் கிருஷ்ணருக்கு மலராக சேவை செய்ய விரும்புகிறது. கன்றுக்குட்டி கிருஷ்ணருக்கு கன்றாக சேவை செய்ய விரும்புகிறது. கோபியர்கள் கிருஷ்ணருக்கு கோபியராக சேவை செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றுதான், ஆனால் வெவ்வேறு வடிவங்களின் அடிப்படையில் மட்டுமே வேறுபடுகிறார்கள்." |
| 750801 - சொற்பொழிவு SB 06.01.49 - New Orleans Farm |