Jump to content

TA/750730 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் டல்லாஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஆன்மீக ஆன்மா அல்லது தனிப்பட்ட ஆன்மா, கிருஷ்ணரின் ஒரு பகுதியாகும். எனவே, முழுமையோடு (கிருஷ்ணருடன்) இணைந்திருப்பது அதன் கடமையாகும். ஒரு தட்டச்சு இயந்திரத்தின் உள்ள ஒரு திருகாணி (ஸ்க்ரூ) போலத்தான்: அந்தத் திருகாணி இயந்திரத்துடன் இணைந்திருக்கும் போது அதற்கு மதிப்பு உண்டு. ஆனால் அது இயந்திரத்தை விட்டு தனியாக இருக்கும் போது அதற்கு எந்த மதிப்பும் இல்லை. அந்தச் சிறிய திருகாணியை யார் மதிக்கிறார்கள்? ஆனால் இயந்திரத்திற்கு அந்தத் திருகாணி தேவைப்படும்போது, அதை வாங்க கடைக்குச் சென்றால் ஐந்து டாலர்கள் வரை கேட்பார்கள். ஏன்? அந்த இயந்திரத்தில் அது பொருத்தப்படும் போது அதற்கு மதிப்பு ஏற்படுகிறது.இதற்கு இன்னும் பல உதாரணங்கள் உள்ளன. நெருப்பு எரியும்போது, அதிலிருந்து 'ஃபுட்! ஃபுட்!' என்று சிறிய தீப்பொறிகள் கிளம்புவதைப் பார்க்கலாம். அவை மிகவும் அழகாக இருக்கின்றன. நெருப்புடன் சேர்ந்திருப்பதால் அவை அழகாகத் திகழ்கின்றன. ஆனால் நெருப்பை விட்டு அந்தத் தீப்பொறி கீழே விழுந்த உடனேயே, அதற்கு எந்த மதிப்பும் இல்லை. யாரும் அதைப் பொருட்படுத்துவதில்லை. அதன் மதிப்பு போய்விடுகிறது.அதேபோல், நாம் கிருஷ்ணரின் ஒரு பகுதியாக அவரோடு இருக்கும் வரைதான் நமக்கு மதிப்பு. கிருஷ்ணரின் தொடர்பை விட்டு நாம் விலகிய உடனேயே, நமக்கு எந்த மதிப்பும் இல்லை. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்."
750730 - சொற்பொழிவு SB 06.01.48 - டல்லாஸ்