TA/750726b உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் லாகுனா கடற்கரை இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "ஒவ்வொருவரும் சூரிய ஒளியை விரும்புகிறார்கள். ஏன் ஒரு இடத்தில் அது மறுக்கப்படுகிறது, மற்றொரு இடத்தில் சூரிய ஒளி இருக்கிறது? நீங்கள் சுதந்திரமாக இல்லை. நீங்கள் சூரிய ஒளியை விரும்பினாலும், அங்கே சூரிய ஒளி இல்லை. பிறகு எப்படி நீங்கள் சுதந்திரமாக உணர்கிறீர்கள்? நீங்கள் சூரிய ஒளியைக் கொண்டு வாருங்கள். ஆனால் அது நடப்பதில்லை. அங்கே ஒரு உயரிய ஏற்பாடு இருக்கிறது. எனவே, அந்த உயரிய ஏற்பாட்டை ஏற்பதுதான் உண்மையான வேலை, பொய் சுதந்திரத்தை பிரகடனப்படுத்துவது அல்ல. அது சாத்தியமில்லை. 'அரசாங்கம் விதித்த சட்டங்களுக்கு நான் கட்டுப்படமாட்டேன், அரசாங்கத்தின் சட்டத்திலிருந்து நான் சுதந்திரமாக இருக்கிறேன்' என்று நான் கூறினால், அது சாத்தியமில்லை. நீங்கள் சட்டத்தை மீறுபவராக மாறினால், நீங்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள். எனவே, 'நான் அரசாங்க சட்டங்களிலிருந்து சுதந்திரமாக இருக்கிறேன்' என்று பிரகடனம் செய்வதில் என்ன பயன்? அங்கே சுதந்திரம் இல்லை. நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள அந்த சிறிய சுதந்திரத்தை நாம் சரியாகப் பயன்படுத்தினால், அது மிகவும் நல்லது. 'எனக்கு எந்தக் கடமையும் இல்லை, நான் சுதந்திரமாக இருக்கிறேன்' என்று நாம் தேவையில்லாமல் பிரகடனம் செய்தால், அது ஒரு பைத்தியக்காரனின் முன்மொழிவு (வார்த்தை) ஆகும்." |
| 750726 - உரையாடல் - லாகுனா கடற்கரை |