TA/750726 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாகுனா கடற்கரை இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "எனது இலக்கு என்னவென்று தெரியாமல், எனது காரை முழு வேகத்தில் ஓட்ட முயற்சித்தால், அதன் முடிவு என்னவாகும்? அதன் முடிவு பேரழிவாகத்தான் இருக்கும். நாம் ஏன் ஓடிக்கொண்டிருக்கிறோம் என்பதை நாம் கண்டிப்பாக அறிய வேண்டும். ஓடுவது என்றால்... ஒரு நதி பெரும் அலையுடனும் வேகத்துடனும் பாய்ந்து ஓடுகிறது, ஆனால் அதன் இலக்கு கடலாகும். அந்த நதி கடலை வந்தடையும் போது, அதன் ஓட்டம் (இலக்கு) நிறைவடைகிறது.அதேபோல, நமக்கான இலக்கு எது என்பதை நாம் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நமது இலக்கு விஷ்ணு, அதாவது பகவான் ஆவார். நாம் அனைவரும் பகவானின் பின்னப் பகுதிகள் (அங்கங்கள்). நாம்... ஏதோ ஒரு வகையில், இந்த பௌதிக உலகில் வீழ்ந்துவிட்டோம். எனவே, நம்முடைய வாழ்க்கையின் இலக்கு மீண்டும் இல்லத்திற்கு, அதாவது மீண்டும் பகவானிடம் திரும்பிச் செல்வதாக இருக்க வேண்டும். அதுமட்டுமே நம்முடைய இலக்கு. இதைத் தவிர வேறு எந்த இலக்கும் இல்லை.அதனால் தான், நம்முடைய கிருஷ்ண உணர்வு இயக்கம், 'உங்கள் வாழ்க்கையின் இலக்கை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்' என்று கற்பிக்கிறது. அந்த வாழ்க்கையின் இலக்கு என்ன? 'மீண்டும் இல்லத்திற்கு, மீண்டும் பகவானிடம்'. நீங்கள் இப்போது நரகத்தை நோக்கி, நேர் எதிர் திசையில் சென்று கொண்டிருக்கிறீர்கள். அது உங்களுடைய இலக்கு அல்ல. நீங்கள் இந்தத் திசையில், அதாவது பகவானை நோக்கிச் செல்ல வேண்டும். இதுவே எங்களுடைய பிரச்சாரம் (நோக்கம்) ஆகும்." |
| 750726 - சொற்பொழிவு SB 06.01.45 - லாகுனா கடற்கரை |