TA/750725b காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "சைதன்ய மஹாபிரபுவின் கட்டளை என்னவென்றால், 'யாரே தெக, தாரே கஹ கிருஷ்ண-உபதேஷ' (சை. ச மத்திய 7.128(1975)). வீண் பேச்சுகளைப் பேசாதீர்கள். நீங்கள் யாரைச் சந்தித்தாலும், நீங்கள் ஒரு தலைவராகி எதையாவது பேச விரும்பினால், கிருஷ்ண-கதாவைப் (கிருஷ்ணரைப் பற்றிய விஷயங்களை) பேசுங்கள். 'யாரே தெக, தாரே கஹ கிருஷ்ண' — கிருஷ்ணர் என்ன கூறினாரோ அதைப்பற்றிப் பேசுங்கள். அதன் பிறகு, ஒரு சிறந்த பேச்சாளராக வேண்டும் என்ற உங்கள் லட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.இல்லையெனில், ஏமாற்றுக்காரனே, நீ வெறும் பேச்சாளனாக மட்டுமே எஞ்சுவாய். நீ பேசிக் கொண்டேதான் இருப்பாய்; ஆனால் உனக்கு எதுவும் கிடைக்காது. உங்கள் பேசும் திறனை நீங்கள் சரியாகப் பயன்படுத்த விரும்பினால், கிருஷ்ணர் என்ன உபதேசம் செய்தாரோ அதைப்பற்றிப் பேசுங்கள். அப்போது உங்கள் வாழ்க்கை வெற்றியடையும்.ஆனால் நீங்கள் முட்டாள்தனமாகப் பேசினால், நீங்கள் ஒரு முட்டாள் என்பது வெட்டவெளிச்சமாகிவிடும். 'தாவச் ச சோபதே மூர்கோ யாவத் கிஞ்சிந் ந பாஸதே': 'ஒரு முட்டாள் பேசாமல் இருக்கும் வரைதான் அழகாக (அறிவாளியாக) தோன்றுவான். அவன் தன் வாயைத் திறந்து பேசத் தொடங்கிய உடனே, அவன் ஒரு முட்டாள் என்பது தெரிந்துவிடும்.'" |
| 750725 - காலை உலா - லாஸ் ஏஞ்சல்ஸ் |