Jump to content

TA/750724 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஈஶ்வர꞉ ஸர்வ-பூதானாம்ʼ ஹ்ருʼத்-தேஶே அர்ஜுன திஷ்டதி (BG 18.61): 'என் அன்பான அர்ஜுனா, பகவான் அனைவருடைய இதயத்திலும் இருக்கிறார்'. அவர் ஏன் அங்கே இருக்கிறார்? ஏனென்றால் அவர் தான் ஸுஹ்ருʼதம்ʼ ஸர்வ-பூதானாம் (BG 5.29). நாம் பகவானின் மகன்கள். அவர் மிகவும் வருந்துகிறார் அதாவது நாம் தேவையில்லாமல் இந்த பிரபஞ்சத்தில் அலைந்துக் கொண்டிருக்கிறோம் மேலும் வேறுபட்ட உடலில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறோம், மேலும் இது நடந்துக் கொண்டிருக்கிறது. எனவே ஈஶ்வர, அவர் மிகவும் நலம் விரும்பி, நண்பன். அவர் வெறுமனே தன் முகத்தை உங்கள் பக்கம் திரும்ப முயற்சி செய்கிறார். அவ்வளவுதான். ஈஶ்வர꞉ ஸர்வ-பூதானாம் (BG 18.61). அவர் கொஞ்சம் சுதந்திரம் கொடுத்திருக்கிறார், எனவே நீங்கள் விரும்பியதை செய்யுங்கள். ஆனால் அவர் வெறுமனே வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறார், 'இந்த போக்கிரிகள் எப்போது என் பக்கம் திரும்புவார்கள்?' அதுதான் அவருடைய வேலை. அது வேத ஶாஸ்தரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதாவது இரண்டு பறவைகள் ஒரே மரத்தில் உட்கார்ந்துக் கொண்டிருக்கிறது. ஒன்று பழத்தை தின்றுக் கொண்டிருக்கிறது, மற்றொன்று வெறுமனே சாட்சியாக இருக்கிறது. எனவே தின்றுக் கொண்டிருக்கும் பறவை ஜீவாத்மாவாகும், தனிநபர் ஆத்மா, மேலும் சாட்சியாக இருக்கும் பறவை பகவானாகும், பரமாத்மா."
750724 - சொற்பொழிவு SB 06.01.43 - லாஸ் ஏஞ்சல்ஸ்