Jump to content

TA/750723 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே, இந்த உடலை ஏற்றுக் கொண்ட எவரும், தைஹ்யஸ்ய, அவர் என்ன செய்து கொண்டிருந்தாலும், அது அனைத்தும் பல சாட்சிகளால் சாட்சியாகப் பார்க்கப்படுகிறது. உங்களால் இதை எவ்வாறு தவிர்க்க முடியும்? உங்களால் எவ்வாறு எதையும் மிக ரகசியமாகச் செய்ய முடியும்? அது சாத்தியமே இல்லை. அனைத்தும் குறிக்கப்பட்டு வருகின்றன. எனவே, தண்டனையையோ அல்லது வெகுமதியையோ நீங்கள் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும், ஏனெனில் நீங்கள் சுதந்திரமானவர்கள் அல்ல. நாம் முட்டாள்தனமாக நம்மை சுதந்திரமானவர்கள் என்று கூறிக்கொள்கிறோம். 'நாங்கள் யாரைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. கடவுள் என்று யாரும் இல்லை' என்கிறோம். ஆனால், அங்கே மரணம் இருக்கிறது. அதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். அந்த மரணமே கடவுள். கிருஷ்ணர் கூறுகிறார், 'அஹம் மிருத்யுஹ் ஸர்வ-ஹரஷ் ச' (ப.கீ 10.34 (1975)) - 'நானே அனைத்தையும் கவரும் மரணம் ஆவேன்.' தன் வாழ்நாளில் கடவுளைக் காணாத ஒருவன், மரணத்தின் போது கடவுளைக் காண்பான். எனவே, கடவுளைக் காணாமல் இருக்க வாய்ப்பே இல்லை."
750723 - சொற்பொழிவு SB 06.01.42 - லாஸ் ஏஞ்சல்ஸ்