Jump to content

TA/750721c சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"சுவை என்பது ஜீவேர ஸ்வரூப ஹய நித்ய-கிருஷ்ண-தாஸ (சை. ச மத்திய 20.108-109(1975)): நாம் அனைவரும் இறைவனின் நித்தியமான சேவகர்கள் ஆவோம். இதுவே நமது தர்மம், அல்லது நமது உள்ளார்ந்த இயல்பான நிலை.உதாரணமாக, சர்க்கரை இனிப்பாக இருக்கும். அதுவே அதன் சுவை. சர்க்கரையும் உப்பும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக, வெள்ளை நிறத் தூளாக இருக்கலாம். ஆனால், நான் உங்களுக்கு சர்க்கரை என்று சொல்லி உப்பைக் கொடுத்தால், அதை வாயில் வைத்த உடனே நீங்கள், "ஓ, இது சர்க்கரை இல்லை, இது சர்க்கரை இல்லை!" என்று சொல்லிவிடுவீர்கள். எப்படிச் சொல்கிறீர்கள்? சுவையைக் கொண்டு.அதேபோல், ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு உள்ளார்ந்த இயல்பான நிலை இருக்கிறது. சர்க்கரை இனிப்பானது, மிளகாய் காரமானது. சர்க்கரை காரமாகவும், மிளகாய் இனிப்பாகவும் இருந்தால், நீங்கள் அதை தூக்கி எறிந்துவிடுவீர்கள். ஏனெனில் அது உண்மையானது அல்ல. அது உண்மையானது அல்ல.இதேபோல், மனிதனின் உள்ளார்ந்த இயல்பான நிலை அல்லது தர்மம் என்ன? சேவை செய்வது. இதுவே நமது இயல்பான நிலை. நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் சேவை செய்து கொண்டிருக்கிறோம். சேவை செய்வதைத் தவிர நமக்கு வேறு வேலையே இல்லை. எனவே இதுதான் நமது உண்மையான நிலை. ஆனால், நாம் தவறான இடத்தில் சேவை செய்து கொண்டிருக்கிறோம்; அதனால்தான் நாம் திருப்தியடையாமல் இருக்கிறோம். இதுதான் தற்போதைய நிலை."
750721 - சொற்பொழிவு SB 06.01.40 - சான் பிரான்சிஸ்கோ