TA/750720b காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "பஹுலாஷ்வா: . . .முதலில் அந்த நபர் தான் இந்த உடல் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அந்த உளவியல் நிபுணர் முதலில் தான் இந்த உடல் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
பிரபுபாதர்: ம்ம். பிறகு, அவர் என்ன சொன்னார்? பஹுலாஷ்வா: ஆம், அவர் ஆன்மா என்று ஒன்று இருப்பதாகவும், நாம் உடல் அல்ல என்றும் நம்புகிறார்; மேலும், அதைத் தெளிவாகப் புரிந்துகொள்வதற்காக பகவத் கீதையை மிகவும் தீவிரமாகப் படிக்கத் தொடங்க வேண்டும் என்று அவர் நம்புகிறார் (எதிர்பார்க்கிறார்). பிரபுபாதர்: ஆம். அவர் ஆத்மா இருப்பதனை நிரூபிக்கட்டும். ஒரு விஞ்ஞானி, தத்துவஞானி அல்லது உளவியல் நிபுணர் "இங்கே ஆத்மா இருக்கிறது" என்று நிரூபித்தால், அது மேலை நாட்டினருக்குச் செய்யும் ஒரு பெரிய தொண்டாக இருக்கும். பஹுலாஷ்வா: ஸ்ரீல பிரபுபாதரே, ஆனால் அவர்கள் அதை எப்படி நிரூபிக்க வேண்டும்? நாம் வேத சான்றுகளைக் கொடுத்து அதை நிரூபித்துள்ளோம். ஆனால் ஒரு விஞ்ஞானி அதை எப்படி செய்ய வேண்டும்? பிரபுபாதர்: இல்லை, நாம் அதை ஒரு உயிருள்ள மனிதனுக்கும் இறந்த மனிதனுக்கும் உள்ள வித்தியாசத்தை வைத்து நிரூபிக்கிறோம், அந்த ஆதாரத்தை நாம் கொடுக்கிறோம். இந்த இறந்த மனிதனுக்கும் உயிருள்ள மனிதனுக்கும் என்ன வித்தியாசம்? என்ன இழப்பு? எது காணாமல் போயுள்ளது? இதுவே ஆதாரம். நான் பலமுறை சொல்லியிருக்கிறேன், மகன் "என் தந்தை போய்விட்டார். என் தந்தை. . ." என்று அழுகிறான். "உன் தந்தை எங்கே போனார்? அவர் இங்கேதான் படுத்திருக்கிறார். அப்படியென்றால் எது போனது? நீ அதை பார்த்ததில்லை." இதுதான் ஆதாரம். "தந்தை போய்விட்டார்" என்று ஏன் அழுகிறாய்? தந்தை இங்கேதான் படுத்திருக்கிறார். ஏன் "போய்விட்டார்" என்று சொல்கிறாய்? அப்படியென்றால் எது போனதோ, அதை நீ ஒருபோதும் பார்த்ததில்லை. இப்போது நீ உணர்கிறாய், "ஆம், ஏதோ ஒன்று அங்கே இருந்தது. இப்போது அது போய்விட்டது." இதுதான் ஆதாரம்." |
| 750720 - காலை உலா - சான் பிரான்சிஸ்கோ |