Jump to content

TA/750719 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"முதல் கொள்கை குருவை ஏற்றுக் கொள்வதாகும்." குரு இல்லையென்றால், அது எவ்வாறு நிறைவேற்றப்படும், யஸ்ய தேவே பரா பக்திர் யதா தேவே ததா குரௌ (ŚU 6.23)? இதுதான் வேத கட்டளை. மற்ற வேத கட்டளைகள் ஒரே மாதிரியாக தோன்றும். கத உபநிஷத் கூறுகிறது, தத்-விஜ்ஞானார்தம்ʼ ஸ குரும் ஏவ அபிகச்சேத் (MU 1.2.12): "நீங்கள் அந்த உன்னதமான விஞ்ஞானத்தை கற்றுக் கொள்ள வேண்டுமென்றால், பிறகு உங்கள் முதல் வேலையாக ஒரு குருவிடம் செல்ல வேண்டும்." குரு... பகவான் ஒருவரே என்பது போல், குருவும் ஒருவரே. அங்கே பல குருக்கள் இருக்க வாய்ப்பில்லை. இக்காலத்தில் அது ஒரு நவநாகரீகமாகிவிட்டது அதாவது "எனக்கு என் சொந்த குரு இருக்கிறார். உங்களுக்கு உங்கள் சொந்த குரு இருக்கிறார்." இல்லை. குரு என்றால் பகவானின் பிரதிநிதி. பகவான் ஒருவரே என்பது போல், குருவும் ஒருவரே. அங்கே பல குருக்கள் இருக்க முடியாது. ஏனென்றால் பகவான் ஒருவரே, அங்கே எவ்வாறு வெவ்வேறு குருக்கள் இருக்க முடியும்? குருவின் கொள்கை ஒன்ரே."
750719 - சொற்பொழிவு SB 06.01.37 - சான் பிரான்சிஸ்கோ