TA/750718 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "ஸர்வ-க꞉. எங்கும் ஜீவாத்மாக்கள் இருக்கின்றன. தண்ணீரில் உயிரினங்கள் வாழ்கின்றன, நிலத்தில் உயிரினங்கள் வாழ்கின்றன, உயிரினங்கள் காற்றில் வாழ்கின்றன, மேலும் ஏன் நெருப்பில் இருக்க கூடாது? நெருப்பும் ஐந்து பஞ்சபூதங்களில் ஒன்றாகும்: நிலம், தண்ணீர், நெருப்பு, காற்று மேலும் வானம். எனவே தண்ணீரில், பூமியில், காற்றில், வானத்தில், உயிரினங்கள் இருக்கும் பொழுது,
நெருப்பில் இருக்க என்ன எதிர்ப்பு? இது முட்டாள்தனம். மேலும் கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறுகிறார் இமம்ʼ விவஸ்வதே யோகம்ʼ ப்ரோக்தவான் அஹம் அவ்யயம் (BG 4.1): "நான் இந்த தத்துவத்தை முன்பு சூரிய பகவானிடம் கூறினேன்." எனவே அங்கே சூரிய பகவான் அல்லது சூரிய கோளின் ராஜா இல்லையென்றால்... எனவே இந்த ராஜா அங்கிருந்தால், குடிமக்கள் அங்கிருக்க வேண்டும், அரசும் அங்கிருக்க வேண்டும்—ஆனால் அவை நெருப்பால் செய்யப்பட்டவை. எனவே அதேபோல், வைகுண்ட உலகில் அனைத்தும் ஆன்மீகமே. அதை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். நம் சொந்த முடிவை முட்டாள்தனமாக செய்யக் கூடாது. அது சாத்தியமல்ல." |
| 750718 - சொற்பொழிவு SB 06.01.33 - சான் பிரான்சிஸ்கோ |