TA/750717b காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "பிரபுபாதா: நீங்கள் பொதுமக்களின் கருத்தை எடுத்துக்கொண்டால், எண்பத்து நான்கு லட்சம் (8.4 மில்லியன்) ஜீவராசிகளில், எண்பது லட்சம் ஜீவராசிகளுக்கு உங்களைப் போன்ற ஒரு முட்டாளின் தேவை இல்லை. நாகரிகமடைந்தவர்கள் என்று சொல்லப்படுபவர்களில் கூட, ஒரு சிலருக்கு மட்டுமே உங்கள் சேவை தேவைப்படுகிறது. அப்படியென்றால் உங்கள் சேவையின் மதிப்பு என்ன? மற்ற உயிரினங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் ஏதேனும் பிரச்சினை இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? அவை ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்கு மிகவும் சுதந்திரமாக நடந்து சென்று சாப்பிடுகின்றன. அங்கு என்ன பழங்கள் இருக்கிறதோ, அவற்றை அவை சாப்பிடுகின்றன. மேலும், இணை சேருவதற்கு, பெண் பறவை எப்போதும் ஆண் பறவையுடனேயே இருக்கிறது. பிறப்பு நிகழும்போது ஒரு ஆண், ஒரு பெண் என்று இயற்கையே கொடுத்துவிடுகிறது—பூனைகள், நாய்கள் மற்றும் பறவைகளுக்கு. எனவே அங்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அங்கு ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா?
பிரம்மானந்தா: இல்லை. பிரபுபாதா: பிறகு ஏன் இந்த முட்டாள்கள் பிரச்சினையை உருவாக்குகிறார்கள்? மேலும் ஒரு பெரிய விஞ்ஞானியாகி, நல்ல சம்பளம், கொழுத்த சம்பளம் வாங்குவது, அவ்வளவுதான். (இடைவேளை) அவர் ஹைட்ரஜன் குண்டைக் கண்டுபிடித்திருக்கிறார், ஆனால் அதற்காக ஒவ்வொரு நாளும் போர் நடக்கிறது என்று அர்த்தமா? சொல்லப்போனால், இருபது ஆண்டுகள் அல்லது ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு போர் நடக்கும், அப்போதுதான் அவருடைய சேவை பாராட்டப்படும், அதற்குள் அவர் இறந்துவிடுவார்." |
| 750717 - காலை உலா - சான் பிரான்சிஸ்கோ |