TA/750717 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "இப்போது நாம் ஸ்ரீமத்-பாகவதம் அல்லது பகவத்-கீதையைப் படிக்கிறோம். இது... இந்த இலக்கியம் அன்னப் பறவைகளுக்கானது, காகங்களுக்கானது அல்ல. இதுதான் இரு வகுப்புகளுக்கு இடையேயான வேறுபாடு. மற்றும் பிற இலக்கியங்களான காம இலக்கியங்கள், குற்றச் செயல்களைப் பற்றிய இலக்கியங்கள் என இப்படி எத்தனையோ இலக்கியங்கள் உள்ளன—அவை காக வகுப்பைச் சேர்ந்த மனிதர்களுக்காக இருக்கின்றன. ஆனால், இந்த இலக்கியம் (பாகவதம்) அன்ன வகுப்பைச் சேர்ந்த மனிதர்களுக்காக, அதாவது பரமஹம்சர்களுக்காக [பக்தர்களுக்காக] உரியது. நாமும் அதைப் படிக்கிறோம்... நாம் செய்தித்தாள்கள் போன்ற குப்பைகளில் ஆர்வமாக இல்லை. நாம் ஸ்ரீமத்-பாகவதத்தில் ஆர்வமாக இருக்கிறோம். ஏன்? ஏனென்றால், இந்த இலக்கியத்திற்குள் முழுமுதற் கடவுளின் பெருமைகள் உள்ளன; அவர் முழு பிரபஞ்ச விவகாரங்களையும் எப்படி நடத்துகிறார், சூரியன் அவரது கட்டளைப்படி எப்படி சரியாக நேரத்தில் உதிக்கிறது, சந்திரன் எப்படி சரியாக அவரது கட்டளைப்படி எழுகிறது, அவற்றில் ஒரு நிமிட நேரத் தவறு கூட இல்லை என்பது போன்ற விஷயங்கள் இதில் புகழாரம் செய்யப்பட்டுள்ளன." |
| 750717 - சொற்பொழிவு SB 06.01.32 - சான் பிரான்சிஸ்கோ |