TA/750716b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ-வில் வழங்கிய அமிர்தத் துளி
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| ஆத்மா இதயத்திற்குள் வசிக்கிறது. பரமாத்மாவும் கூட அங்கேயே தான் குடி கொண்டு இருக்கிறார். யோகிகள் அவரை தரிசிக்க விரும்புகிறார்கள். பரமாத்மாவும் ஜீவாத்மாவும் அருகருகில் இருந்தாலும், பரமாத்மா நம்மை என்றும் வழிகாட்டிக் கொண்டிருந்தாலும், நம்முடைய அறியாமையின் காரணமாக நம்மால் அவரைக் காண முடிவதில்லை, அவருடைய குரலைக் கேட்கவும் முடிவதில்லை.
அந்தர்-பஹி: அவர் உள்ளேயும் இருக்கிறார், வெளியேயும் இருக்கிறார்; ஆனால் துரதிர்ஷ்டவசமாக நம்மால் அவரை உள்ளேயும் பார்க்க முடிவதில்லை, வெளியேயும் பார்க்க முடிவதில்லை. அது எவ்வாறு சாத்தியம்? உங்களது குடும்ப உறுப்பினர் ஒருவர், அதாவது உங்களது தந்தையோ அல்லது சகோதரரோ நாடக மேடையில் நடித்துக் கொண்டிருக்கிறார், ஆனால் உங்களால் அவரை அடையாளம் காண முடிவதில்லை. யாரோ ஒருவர், "இதோ பார், உன் சகோதரன் தான் அங்கே நடித்துக் கொண்டிருக்கிறான்" என்று சுட்டிக்காட்டினாலும், உங்களால் அவரை அடையாளம் காண முடிவதில்லை. நடோ நாட்டியதரோ யதா (ஸ்ரீமத் பாகவதம் 1.8.19). நாடக மேடையில் வேடமணிந்து நடிக்கும் ஒருவரை அவருடைய உறவினரால் அடையாளம் காண முடிவதில்லை. அதேபோலத்தான், கிருஷ்ணர் எங்கும் நிறைந்திருக்கிறார், அண்டாந்தர-ஸ்த-பரமாணு-சயாந்தர-ஸ்தம் (பிரம்ம சம்ஹிதை 5.35) — அவர் ஒவ்வொரு அண்டத்திற்குள்ளும், ஒவ்வொரு அணுவிற்குள்ளும் இருக்கிறார். |
| 750716 - சொற்பொழிவு SB 06.01.31 - சான் பிரான்சிஸ்கோ |