TA/750716 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "கடவுள் யார், அவருடைய கட்டளை என்ன, நாம் எவ்வாறு செயல்படுகிறோம், நம் வாழ்வின் லட்சியம் என்ன என்பதைப் புரிந்துகொள்ளும் முயற்சி இல்லையென்றால், அங்கே மதம் என்பது எங்கே இருக்கிறது? அது மதம் அல்ல. மதம் என்பது இந்த நான்கு கொள்கைகளைக் குறிக்கிறது: கடவுள் யார், நாம் யார், கடவுளோடு நமக்கிருக்கும் உறவு என்ன, மற்றும் அதற்கேற்ப செயல்பட்டு வாழ்வின் இறுதி லட்சியத்தை அடைவது. இதுவே மதம் ஆகும். எனவே, இந்த விஷயங்களை ஆராயாத எந்தவொரு மதக் கோட்பாடும் உண்மையான மதம் அல்ல. இது ஸ்ரீமத் பாகவதத்தில் 'கைதவஹ்' என்று விளக்கப்பட்டுள்ளது. கைதவஃ என்றால் ஏமாற்றுதல் என்று பொருள். மதம் என்றால் இந்த விஷயங்கள் தான். எங்கே இந்த கேள்விகளும் விசாரணைகளும் இருக்கிறதோ, அதுவே மதம். இதுவே வேதாந்த சூத்திரத்தின் முக்கிய கருப்பொருளாகும்; அதில் 'அதாதோ பிரம்ம ஜிக்ஞாஸா' என்று கூறப்பட்டுள்ளது: இப்போது, இந்த மனித வாழ்க்கை பரம்பொருளைப் பற்றி விசாரிப்பதற்கே உருவானது. எனவே, அதுவே மதம்." |
| 750716 - Interview - சான் பிரான்சிஸ்கோ |