TA/750714 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் பிலடெல்பியா இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "பகவான் இயற்கைக்கு கட்டளையிட்டார் அதாவது 'இந்த உயிர்வாழிகளுக்கு இதுபோல் ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. நீங்கள் அவனுக்கு ஒரு இயந்திரம் கொடுங்கள்'. எனவே ப்ரக்ருʼதி, அல்லது இயற்கை, நமக்கு வேறுபட்ட இயந்திரங்களை கொடுத்தது. ப்ரக்ருʼதே꞉ க்ரியமாணானி குணை꞉ கர்மாணி ஸர்வஶ꞉ (BG 3.27). நான் இரண்டில் ஒன்றாக இயந்திரத்தை ஓட்டவுமில்லை, அந்த இயந்திரத்தை நான் செய்யவுமில்லை. எனக்கு அது ஒரு பரிசாக வேலை செய்வதற்காக, அல்லது என் ஆசையை பூர்த்தி செய்வதற்காக அளிக்கப்பட்டது. இதுதான் நிலை. எனவே ஶாஸ்த்ர கூறுகிறது அதாவது 'இப்போது உனக்கு ஒரு நல்ல இயந்திரம் கிடைத்திருக்கிறது'. Nṛ-deham. மனித உடல் ஒரு சிறந்த இயந்திரம். ந்ருʼ-தேஹம் ஆத்யம்ʼ ஸுலபம்ʼ ஸுகல்பம். இது மிகவும் அரிதானது. பல இன்னல்களுக்கு பிறகு உனக்கு இந்த இயந்திரம் கிடைத்திருக்கிறது, ஏனென்றால் நாம் பல இயந்திரங்கள் கடந்து வர வேண்டியுள்ளது—நீர்வாழ் உயிரினங்கள், தாவரங்கள், பூச்சிகள், மரங்கள், மற்றும் பாம்புகள், ஊர்வன, பிறகு பறவைகள், பிறகு மிருகம்— மில்லியன் கணக்கான ஆண்டுகள். எவ்வாறு என்றால் நீங்கள் இதை பார்த்தீர்கள், மரங்கள் அங்கே நிற்கின்றன, ஒருவேளை ஐந்தாயிரம் ஆண்டுகள் ஒரே இடத்தில் நிற்கிறது. எனவே நீங்கள் அந்த இயந்திரத்தை பெற்றால், உங்களால் நகர முடியாது, நீங்கள் ஒரே இடத்தில் நிற்க வேண்டும். எனவே நாம் இதை கடந்து செல்ல வேண்டும். முட்டாள்களுக்கு, இது தெரியாது. ஆகையினால் இந்த இயந்திரம் ஸுலபம். ஸுலபம் என்றால் மிகவும் அதிர்ஷ்டவசமாக நமக்கு இந்த இயந்திரம் கிடைத்துள்ளது."
|
| 750714 - சொற்பொழிவு SB 06.01.30 - பிலடெல்பியா |