Jump to content

TA/750713b உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் பிலடெல்பியா இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"மதம் என்றால் கடவுளைப் பற்றி அறிவதும், அவரிடம் அன்பு செலுத்துவதும் ஆகும். ஆனால் பொதுவாக, ஒரு மனிதனுக்கு கடவுள் என்றால் என்னவென்றே தெரியாது, இதில் அவரிடம் அன்பு செலுத்துவதைப் பற்றி பேசுவதற்கு என்ன இருக்கிறது? எனவே, அது ஏமாற்று மதம். அது உண்மையான மதம் அல்ல. ஆனால், கிறிஸ்தவ மதத்தைப் பொறுத்தவரை, கடவுளைப் புரிந்துகொள்வதற்குப் போதிய வாய்ப்புகள் உள்ளன, ஆனால் அவர்கள் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. உதாரணத்திற்கு, "நீ கொலை செய்யாதிருப்பாயாக" என்பது ஒரு கட்டளை. ஆனால் கிறிஸ்தவ உலகில், மிகச்சிறந்த கசாப்புக் கடைகள் (விலங்குவதைக் கூடங்கள்) பராமரிக்கப்படுகின்றன. பிறகு அவர்கள் எப்படி கடவுள் உணர்வுள்ளவர்களாக மாற முடியும்? அவர்கள் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதில்லை, இயேசு கிறிஸ்து என்ன கட்டளையிட்டார் என்பதையும் பொருட்படுத்துவதில்லை. இது கிறிஸ்தவ மதத்தில் மட்டுமல்ல. ஒவ்வொரு மதத்திலும் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. "நான் இந்து", "நான் முஸ்லிம்", "நான் கிறிஸ்தவன்" என்று முத்திரை குத்திக் கொள்வது மட்டுமே நடக்கிறது. ஆனால் அவர்களில் யாருக்குமே கடவுள் என்றால் என்னவென்றும், அவரிடம் எப்படி அன்பு செலுத்துவது என்றும் தெரியாது."
750713 - உரையாடல் B - பிலடெல்பியா