Jump to content

TA/750712b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் பிலடெல்பியா இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"உடலை மாற்றிய பிறகு, நான் என்ன விரும்பினேன், ஏன் எனக்கு இந்த வகையான உடல் கிடைத்தது என்பதை நாம் மறந்துவிடுகிறோம். ஆனால் கிருஷ்ணர், அவர் உங்கள் இதயத்திற்குள் வீற்றிருக்கிறார். அவர் மறப்பதில்லை. அவர் அதை உங்களுக்குக் கொடுக்கிறார். யே யதா மாம் ப்ரபத்யந்தே(ப.கீ 4.11 (1975)) நீங்கள் இந்த வகையான உடலை விரும்பினீர்கள்; அதை நீங்கள் பெறுகிறீர்கள். கிருஷ்ணர் அவ்வளவு கருணையுள்ளவர். யாராவது எல்லாவற்றையும் சாப்பிடக்கூடிய ஒரு உடலை விரும்பினால், கிருஷ்ணர் அவருக்கு ஒரு பன்றியின் உடலைக் கொடுக்கிறார், இதனால் அது மலத்தைக் கூட சாப்பிட முடியும். யாராவது "நான் கிருஷ்ணருடன் நடனமாட வேண்டும்" என்று ஒரு உடலை விரும்பினால், அவர்களுக்கு அந்த உடல் கிடைக்கிறது. இப்போது, நீங்கள் கிருஷ்ணருடன் நடனமாட, கிருஷ்ணருடன் பேச, கிருஷ்ணருடன் விளையாடக்கூடிய ஒரு உடலைப் பெறப் போகிறீர்களா என்பதைத் தீர்மானிப்பது உங்களுடைய கையில் தான் உள்ளது. அதை உங்களால் பெற முடியும். நீங்கள் மலம், சிறுநீர் போன்றவற்றை எப்படி உண்பது என்ற உடலை விரும்பினால், அதையும் நீங்கள் பெறுவீர்கள். ஆகவே நாம் தீர்மானிக்க வேண்டும், இந்த மனித வாழ்க்கையை."
750712 - சொற்பொழிவு SB 06.01.26-27 - பிலடெல்பியா