TA/750712 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் பிலடெல்பியா இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "ஹரே கிருஷ்ண மந்திரத்தை விற்பனை செய்வதற்காக நாங்கள் எந்தக் கட்டணமும் வசூலிப்பதில்லை. நாங்கள் எல்லா இடங்களிலும் கீர்த்தனம் செய்கிறோம். அதை நீங்கள் இந்த ரத யாத்திரையில் பார்த்தீர்கள். இப்போது, ஹரே கிருஷ்ண என்று கீர்த்தனம் செய்வது மட்டுமே நம்முடைய ஒரே வழி. இந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெறுமனே ஹரே கிருஷ்ண மந்திரத்தை கீர்த்தனம் செய்வதன் மூலம் எங்களைப் பின்தொடர்கிறார்கள். எனவே இந்த ஹரே கிருஷ்ண மந்திரத்தின் ஆற்றல் என்ன என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். எங்களைப் பின்தொடர்வதற்காக, மதிக்கத்தக்க ஆண்களுக்கும் பெண்களுக்கும் நாங்கள் எந்தப் பணமும் கொடுப்பதில்லை. ஆனால் நாங்கள் வெறுமனே ஹரே கிருஷ்ண என்று கீர்த்தனம் செய்கிறோம்.எனவே இது மிகவும் ஆற்றல் வாய்ந்தது. வைஷ்ணவ சம்பிரதாயத்தின் சிறந்த ஆச்சார்யரான நரோத்தம தாஸ தாகூர், 'கோலோகேர பிரேம-தன, ஹரி-நாம-சங்கீர்தன' என்று பாடியுள்ளார். இந்த ஹரே கிருஷ்ண இயக்கம், அல்லது ஹரே கிருஷ்ண கீர்த்தனம் என்பது ஏதோ ஒரு பௌதிகமான (உலகியல்) விஷயம் அல்ல. எனவே ஹரே கிருஷ்ண என்று கீர்த்தனம் செய்வதால் நீங்கள் ஒருபோதும் சோர்வடைய மாட்டீர்கள். நீங்கள் அதை நடைமுறையில் பார்க்கலாம். நீங்கள் இருபத்தி நான்கு மணி நேரமும் தொடர்ந்து கீர்த்தனம் செய்தாலும், ஒருபோதும் சோர்வை உணர மாட்டீர்கள்." |
| 750712 - சொற்பொழிவு Festival Ratha-yatra - பிலடெல்பியா |