Jump to content

TA/750711 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சிக்காகோ இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"அவர்கள் அன்பானவர்களாக இருப்பதில் மிகவும் பெருமைபடுகிறார்கள், ஆனால் ஶாஸ்த்ர கூறுகிறது, "நீங்கள் போக்கிரிகள், அவ்வளவுதான்." மூட. போஜயன் பாயயன் மூடோ ந வேத ஆகதம் அந்தகம். அவனால் அதை புரிந்துக் கொள்ள முடியவில்லை அதாவது "நான் என் குழந்தையை வளர்ப்பதில் மிகவும் பரபரப்பாக இருக்கிறேன், ஆனால் இங்கே, பின்புறத்தில், அங்கே இறப்பு இருக்கிறது. இறப்பு என்னை குலைக்க காத்துக் கொண்டிருக்கிறது."

எனவே இந்த செயல்பாடுகளில் மட்டுமல்ல, அனைத்து செயல்களிலும் நாம் பௌதிக செயல்களில் மிகவும் பரபரப்பாக இருக்கிறோம். மேலும் நமக்கு தெரியவிலை அதாவது என் பின்புறத்தில் இறப்பு நின்றுக் கொண்டிருக்கிறது. அவன் என்னிடம் இருக்கும் அனைத்தையும் எடுத்துக்கொள்வான். கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறியிருக்கிறார், ம்ருʼத்யு꞉ ஸர்வ-ஹரஶ் ச அஹம் (BG 10.34). இறப்பும் கிருஷ்ணரே. அவர் கூறியிருக்கிறார் அஹம். ம்ருʼத்யு꞉ ஸர்வ-ஹரஶ் ச அஹம். "நானே இறப்பு. உன்னால் பகவானை பார்க்க முடியாது. உன் கண்களைப் பற்றி மிகவும் பெருமைபடுகிறாய். இப்போது நீ பார் நான் வந்துவிட்டேன். நான் அனைத்தையும் எடுத்துவிடுவேன், நீ என்ன வைத்திருகிறாய்? இப்போது நீ உன்னையும் உன் சொத்துக்களையும், உன் வானளாவிய கட்டிடங்கள், அனைத்தையும் காப்பாற்றிக் கொள். இப்போது நீ காப்பாற்று.""

750711 - சொற்பொழிவு SB 06.01.26 - சிக்காகோ