Jump to content

TA/750710c காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் சிக்காகோ இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பக்தர்: ஸ்ரீலா பிரபுபாதா, ஸ்ரீமத் பாகவதத்தில் ஒரு பொருளுரையில் நீங்கள் கூறினீர்கள் அதாவது ஐம்பது வருடங்களுக்கு முன்புகூட இந்தியாவில் குடும்பத் தலைவர்கள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அபார்ட்மெண்ட்டில் தனித்தனி அறைகள் அளித்தார்கள் என்று.

பிரபுபாதர்: அபார்ட்மெண்ட் அல்ல; தங்குமிடம்.

பக்தர்: அபார்ட்மெண்ட்டில் தனித்தனி அறைகள். மேலும் கண்வன் மனைவியை பகல் நேரத்தில் பார்க்க முடியாது?

பிரபுபாதர்: இல்லை.

மகன்லால்: எனவே இந்த தரநிலையை நம் இயக்கத்தில் நாம் பின்பற்ற வேண்டுமா?

பிரபுபாதர்: ஆம், அது மிகவும் நல்லது. இதன் உதாரணம் யாதெனில் வெண்ணெய்யும் நெருப்பும் தனித்தனியாக வைக்கப்பட வேண்டும் கூடுமானவறை... இல்லையென்றால் வெண்ணெய் உருகிவிடும். மாத்ரா ஸ்வஸ்ரா துஹித்ரா வா (SB 9.19.17). வெண்ணெய்யும்... என்றால் ஆணும் பெண்ணும். ஆண் வெண்ணெய்யாகும், மேலும் பெண் நெருப்பாகும். எனவே இது ஆண் தந்தையாக, சகோதரனாக அல்லது மகனாக இருப்பினும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மாத்ரா ஸ்வஸ்ரா துஹித்ரா வா. மக்கள் பாலியல் உந்துதலைப் பற்றி மகள், தாய் அல்லது சகோதரி இருக்கும் இடத்தில் நினைக்க கூடாது. ஆனால் ஶாஸ்த்ர சொல்கிறது, "இல்லை. அது சாத்தியமே."

750710 - காலை உலா - சிக்காகோ