TA/770122b - ஶ்ரீல பிரபுபாதர் புவனேஸ்வர் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"மனித வாழ்வின் முக்கிய பணி என்னவென்று வேதாந்த சூத்திரத்தில் கூறப்பட்டுள்ளது: அத்தாட்டோ பிரம்ம ஜிங்ஞாசா. உணவு, தூக்கம், பயம், உடலுறவு போன்ற நான்கு அடிப்படை வாழ்க்கை முறைகளில் மனிதருக்கும் விலங்குகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால், மனிதனால் மட்டுமே கடவுளைப் பற்றி அல்லது பிரம்மத்தைப் பற்றி விசாரிக்க முடியும், அத்தாட்டோ பிரம்ம ஜிங்ஞாசா.அதுவே மனித வாழ்க்கையின் ஒரே நோக்கம். எனவே ஒரு பூனையால் அல்லது நாயால் பிரம்மத்தைப் பற்றி விசாரிக்க முடியாது, ஆனால் மனிதனால் அது குறித்து விசாரிக்க முடியும். ஏனெனில் மனிதனாக இருப்பதால் மட்டுமே அவ்வாறு விசாரிக்க முடியும்."
770122 - சொற்பொழிவு BG 07.01 - புவனேஸ்வர்