TA/770103b - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"என் குரு மஹாராஜா கூறுவார், "என்னால் குழந்தைகளை கிருஷ்ண பக்தர்களாக உருவாக்க முடியுமானால், நான் திருமணம் செய்து நூற்றுக்கணக்கான குழந்தைகளைப் பெற தயாராக இருக்கிறேன்." எங்களால் முடியாவிட்டால், நாங்கள் ஒரு குழந்தையை கூடப் பெற மாட்டோம். வசுதேவர் மற்றும் தேவகி தங்கள் முற்பிறவியில் இருந்ததைப் போல... என்ன பெயர்? அவர்களின் தீர்மானம், "கடவுள் போன்ற ஒரு குழந்தையை எங்களால் பெற முடிந்தால், நாங்கள் குழந்தைகளைப் பெறுவோம். இல்லையெனில், நாங்கள் தவத்தில் ஈடுபடுவோம்." கிருஷ்ணர் வந்தபோது, "உனக்கு என்ன வேண்டும்?" "எனக்கு நீ வேண்டும்." "எனக்கு நிகரானவர் யார்? நானே தோன்றுவேன்."
770103 - உரையாடல் B - மும்பாய்