TA/761111 - ஶ்ரீல பிரபுபாதர் விருந்தாவனம் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஹரி- சௌரி: ஒருவர் கிருஷ்ண உணர்வில் முழுமை அடையாவிட்டால் என்ன நடக்கும்?

பிரபுபாதா: அவள் மீண்டும் மனித உடலில் பிறவி எடுப்பாள் என்று உத்தரவாதம் அளிக்கப்படுகிறது அதனால் அவர் மீண்டும் ஜெபிக்க வாய்ப்பு கிடைக்கும். அதுவும் மிகப்பெரிய லாபமே.சாதாரண மனிதனுக்கு அடுத்த பிறவியில் எந்த உடலை அடைவான் என்பது பற்றி தெரியாது. ஆனால் கிருஷ்ண உணர்வில் இருப்பவனுக்கு, ஜெபிபவனுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டு உள்ளது. சுச்சீனாம் ஶ்ரீமதாம் கேஹே (ப.கீ 6.41(1976)). அவர் ஒரு பிராமணர் போன்ற மிக புனிதமான குடும்பத்திலோ அல்லது மிக பணக்கார குடும்பத்திலோ மனிதனாகப் பிறக்க உத்தரவாதம் அளிக்கப்படுகிறார்."

761111 - உரையாடல் - விருந்தாவனம்