| "இந்த எஜமானப் போட்டி (ஆதிக்கம் செலுத்தும் போட்டி) ஒரு பிறவியில் இருந்து மற்றொரு பிறவியாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது, சில நேரம் மனிதனாக, சில நேரம் விலங்காக, சில நேரம் மீனாக, நீர்வாழ் உயிரினமாக, சில நேரம் தேவர்களாக, பறவையாக. இது தான் ஒட்டுமொத்தப் பௌதிகச் சூழல். சிக்கல் என்னவென்றால், நாம் உண்மையான எஜமானனாக மாற முடியாது. ஆனால் 'நான் எஜமானனாகிவிடுவேன்' என்ற தவறான லட்சியத்தால், நாம் பௌதிக இயற்கைக்கு அடிமையாகி விடுகிறோம். எஜமானனாக மாறுவதற்காக ஒரு குறிப்பிட்ட மனநிலையுடன், சூழலை உருவாக்கி, அந்த எண்ணத்துடன் செயல்படுகிறோம். இறுதியில் மரணத்தின்போது, உடல் முடியும் அந்தச் சூழலில், அந்த எஜமான எண்ணத்தில் மூழ்கியிருக்கும் மனம், அந்த லட்சியத்திற்கு ஏற்ப என்னை மற்றொரு உடலுக்கு இட்டுச் செல்கிறது. அதனால், எனது எஜமானப் பற்றை வெளிப்படுத்த, நான் மீண்டும் மற்றொரு உடலில் தோன்றுகிறேன்; மற்றொரு அத்தியாயம் தொடங்குகிறது."
|