TA/760708d - ஶ்ரீல பிரபுபாதர் வாஷிங்டன் டிசி இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பகவத் கீதையின் போதனை என்னவென்றால், "தத் வித்தி", அதை புரிந்து கொள்ள முயற்சி செய். வெறும் முயற்சி மட்டுமல்ல, கண்டிப்பாக முயற்சி செய். மனித வாழ்வின் நோக்கம் தத்துவத்தை, அதாவது பூரண சத்தியத்தை புரிந்துகொள்வதே. இது மனித வாழ்வின் சிறப்பு வாய்ப்பு. ஒரு மனிதன் அதைப் பற்றி விசாரிப்பதற்கோ அல்லது அதற்காகப் பயிற்றுவிக்கப்படுவதற்கோ இல்லாவிட்டால், அது பெரும் குறைபாடு மற்றும் பொறாமைக்குரியது. மனித வாழ்க்கையில், முழுப் பிரச்சனைக்கும் ஒரு தீர்வைக் காண வாய்ப்பு உள்ளது. உயிர்வாழ் போராட்டம், தகுதியானவை நிலைத்து வாழ்தல் என்பது வாழ்க்கை சுழற்சியாகத் தொடர்கிறது. இப்போது ஒரு வாய்ப்பு உள்ளது, மனித வாழ்க்கை, வாழ்க்கையின் குறிக்கோள் என்ன, அதை எவ்வாறு அடைவது என்பதை அவர் புரிந்து கொள்ள முடியும். அவர் பயிற்சி பெறலாம்."
760708 - சொற்பொழிவு CC Madhya 20.103 - வாஷிங்டன் டிசி