| "பிரம்மச்சாரி ஆஸ்ரமத்திலிருந்து பிச்சையெடுக்க வெளியே செல்ல வேண்டும்: "அம்மா, நாங்கள் இப்படிப்பட்ட கோவில் அல்லது ஆஸ்ரமத்திலிருந்து வருகிறோம். எங்களுக்குச் சில பிச்சைகள் கொடுங்கள்." எனவே ஒவ்வொரு வீட்டிலும், க்ருஹஸ்தர்கள் சிறிது மாவு, சிறிது அரிசி, அல்லது சிறிது பருப்பு, சிறிது பழங்கள் அல்லது சிறிது காய்கறிகள் கொடுப்பார்கள். எல்லோரும் பங்களிக்கலாம். மேலும் பிரம்மச்சாரி அருகிலுள்ள இல்லறத்தார்களின் இடத்திற்குச் சென்று அவர்களிடம் இருந்து ஏதாவது வாங்க வேண்டும். இந்த சேகரிப்பு அவனது தனிப்பட்ட புலன் இன்பத்திற்காக அல்ல. இந்த சேகரிப்பு இந்த நபர்களிடமிருந்து தயாரிக்கப்பட்டு கடவுளுக்கு வழங்கப்படுகிறது"
|