TA/760415 - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நீங்கள் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க விரும்பினால், மீண்டும் வேத கலாச்சாரத்தை—எளிமையான வாழ்க்கை மற்றும் உயர்ந்த சிந்தனையை கொண்டுவர வேண்டும். அதுதான் தேவை. தேவையற்ற விஷயங்களை (அனர்த்தங்கள்) மேலும் மேலும் புகுத்தினால், நீங்கள் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்? நமக்கு அவசியமாகத் தேவைப்படுபவற்றைக் கூட நாம் குறைக்க வேண்டும். நிச்சயமாக, நமக்கு உணவு-தூக்கம்-பயம்-உறவு (ஆஹார-நித்ரா-பய-மைதுனம்) மட்டுமே தேவை. அதைக் குறைக்க வேண்டும். அதுதான் நாகரிகம், அதை அதிகரிப்பது அல்ல. இது ஒரு தவறான வழிகாட்டும் நாகரிகம்."
760415 - சொற்பொழிவு SB 07.12.04 - மும்பாய்