TA/760401 - ஶ்ரீல பிரபுபாதர் விருந்தாவனம் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பிரகலாத மகாராஜா இதை கூறுகிறார், பேசாமல் இருப்பது, முட்டாள்தனமான பேச்சை விட மேலானது. கிருஷ்ணரைப் பற்றிப் பேச முடியாவிட்டால் பேசாமல் இருப்பது மேலானது.எனவே, கிருஷ்ணனைப் பற்றிப் பேச இயலாத, அறிவில் குறைந்தவர்களுக்காக இந்த மௌனம் பரிந்துரைக்கப்படுகிறது. பேச்சை நிறுத்துவது நல்லது. இதுவே மௌனம் எனப்படும். இல்லையெனில், ஸ்ரீல ரூப கோஸ்வாமி கூறுகிறார், "எனக்கு ஒரே ஒரு நாக்கு, இரண்டு காதுகள்தான் உள்ளன. எனவே, ஒரே நாக்கு, இரண்டு காதுகளால் எப்படி நான் அனுபவிக்க முடியும் அல்லது சேவை செய்ய முடியும் ஹரே கிருஷ்ண மந்திரத்தை? எனக்கு மில்லியன் கணக்கான காதுகளும், டிரில்லியன் கணக்கான நாக்குகளும் இருந்திருந்தால், அது சாத்தியமாகியிருக்கும்."
760401 - சொற்பொழிவு SB 07.09.46 - விருந்தாவனம்