TA/760314 - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "மாயாவாதி தத்துவஞானியால் இதை புரிந்து கொள்ள முடியாது. இந்த பௌதிக உலகிற்கு வரும் எவரும் மாயையின் செல்வாக்கின் கீழ் இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். அது நம்மைப் போன்ற சிறிய உயிரினங்களுக்கு சரியானதுதான். ஆனால், அது பரம புருஷ பகவானுக்குப் பொருந்தாது. எனவே, அவர்கள் கிருஷ்ணரின் செயல்களை, குறிப்பாக அவர் கோபியர்களுடன் நடனமாடும்போது தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். ஆகையால், ஒரு புதிய பக்தர், கிருஷ்ணரைப் பற்றி அறியாததால், அவர் கோபியர்களுடன் ஆடும் நடனத்தை உடனடியாகப் புரிந்து கொள்ள முயற்சிக்கக் கூடாது." |
| 760314 - சொற்பொழிவு SB 07.09.36 - மாயாப்பூர் |