TA/751210 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் விருந்தாவனம் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஆண் பெண் இருவரின் இந்த ஈர்ப்பு, இது பொருள் சார்ந்த அடிமைத்தனமாகும். ஆதலால் கூறப்பட்டது யாதெனில், துராபுரேன காமேன (ஶ்ரீ.பா 7.6.8(1975)) : இந்த காம இச்சைகள் இறக்கும் வரையிலும் நிறைவேறாது. இந்த காம இச்சைகளின் இயல்பு என்ன? மோகம், மாயா. இது உண்மை அல்ல - இதற்கு பொருள் இல்லை. ஆனால் அது இருக்கிறது, அதான் உண்மை. உதாரணமாக, கனவில் எவரோ என் தலையை வெட்டுகிறார் நான் அழுகிறேன். உண்மையில் எந்த மனிதனும் என் தலையை வெட்டவில்லை - என் தலை அங்கேயே தான் இருக்கின்றது - ஆனால் இன்னும், நான் இத்தகைய எண்ணங்களால் பாதிக்கப்படுகிறேன். இதுவே மோகம் எனப்படும்."
751210 - சொற்பொழிவு SB 07.06.08 - விருந்தாவனம்