TA/751005 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மொரீஷியஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
“துஷ்க்ருதிகள், அரக்கர்கள் (அசுரர்கள்) மற்றும் பாவச் செயல்களில் ஈடுபடுவோர் காரணமாக தர்மம் பாதிக்கப்படுகிறது. ஆனால் புனிதர்களானவர்கள் தர்மத்தை நடைமுறைப்படுத்துகிறார்கள். அதனால் தான் பரித்ராணாய சாதூநாம் என்று கூறப்படுகிறது. சாது என்றால் புனிதமானவர், கடவுளின் பக்தர் என்பதே பொருள். அவர்கள் சாதுக்கள்.

அசாதுஅல்லது அசுரர் என்றால் கடவுளின் அதிகாரத்தையே மறுக்கும் மனிதர்கள். அவர்களையே அரக்கர்கள் என்று அழைக்கிறார்கள். ஆக, இரண்டு முக்கியக் காரியங்கள் உள்ளன — ‘பரித்ராணாய சாதூநாம் விநாசாய ச துஷ்க்ருதாம்’ : அதாவது, ‘அசுரர்களின் செயல்களை கட்டுப்படுத்தவும், புனிதர்களுக்கு பாதுகாப்பளிக்கவும் நான் அவதரிக்கிறேன்’. ‘தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய’ : அதாவது, ‘தர்மத்தை, மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை நிறுவுவதற்காக’. இந்த மூன்று நோக்கங்களுக்காகவே கிருஷ்ணர், அல்லது கடவுள், அல்லது கடவுளின் பிரதிநிதி — அல்லது கடவுளின் மகன் என்றும் நீங்கள் சொல்லலாம் — அவர்கள் அவதரிக்கிறார்கள். இது தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.”

751005 - சொற்பொழிவு SB 01.02.06 - மொரீஷியஸ்