| "யோகா என்றால் பரமாத்மாவுடன் எவ்வாறு இணைவது என்று பொருள். யோகா என்றால் இணைப்பு, மற்றும் வியோகா என்றால் பிரிப்பு/கவனம் சிதறல். கணிதம் தெரிந்தவர்களுக்குத் தெரியும், யோகா என்பது கூட்டுதல் (சேர்த்தல்); வியோகா என்பது கழித்தல் (பிரித்தல்). தற்போதைய நிபந்தனைக்குட்பட்ட நிலையில், நாம் பிரிக்கப்பட்டுள்ளோம். சொல்லப்போனால், முழுமையாக பிரிக்கப்படவில்லை, ஆனால் நம்முடைய உண்மையான உறவை நாம் மறந்துவிட்டோம். பரம புருஷ பகவானுடனான நம் உறவை நாம் மறந்துவிட்டோம், எனவே அதை மீண்டும் இணைக்க வேண்டும். அதுதான் யோகா என்று அழைக்கப்படுகிறது. ஏதோ ஒரு வகையில் நாம் இப்போது பிரிந்துவிட்டதால், இப்போது அதை மீண்டும் இணைக்க வேண்டும்."
|