| "எல்லோரும் இறந்து கொண்டிருக்கிறார்கள். உங்கள் தந்தை இறந்து கொண்டிருக்கிறார், உங்கள் தாய் இறந்து கொண்டிருக்கிறார், உங்கள் நண்பர் இறந்து கொண்டிருக்கிறார், இதையெல்லாம் பார்த்த பிறகும் உங்களால் புரிந்துகொள்ள முடியாவிட்டால், உங்களுக்கு எப்படிப் புரிய வைப்பது? தினமும் இத்தனை பேர் இறப்பதைக் காண்கிறீர்கள். அஹானி அஹானி லோகானி கச்சந்தி யமாலயம் இஹ. ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நாளும், பல விலங்குகள் அல்லது மனிதர்கள் இறப்பதை நாம் பார்க்கிறோம். ஷேஷ: ஸ்திதம் இச்சந்தி கிம் ஆச்சர்யம்... ஆனால் வாழ்பவர்கள், "நான் சாக மாட்டேன்" என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள். மரணம் தவிர்க்க முடியாதது, ஆனாலும் அவர் "நான் சாக மாட்டேன்" என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆகையால் அதுதான் பிரச்சனை. எல்லோரும் இறந்து கொண்டிருக்கிறார்கள், எல்லோரும் சாகாமல் இருக்க முயற்சிக்கிறார்கள். இதுதான் பிரச்சனை."
|