TA/750710b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சிக்காகோ இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"மனித வாழ்க்கை மூன்று காரியங்களுக்காகவே உத்தேசிக்கப்பட்டுள்ளது: யக்ஞ-தான-தபஹ்-கிரியா. தியாகங்கள், தானம் மற்றும் தவம் செய்வதை ஒருவன் அறிந்திருக்க வேண்டும். இதுவே மனித வாழ்க்கை. முந்தைய யுகங்களில் தங்களுக்கு ஏற்றவாறு யக்ஞ, தான, தபஸ்யங்களைச் செய்தனர். உதாரணமாக, சத்ய யுகத்தில் வால்மீகி முனிவர் அறுபதாயிரம் ஆண்டுகள் தவம் மற்றும் தியானம் செய்தார். அக்காலத்தில் மக்கள் ஒரு லட்சம் ஆண்டுகள் வாழ்ந்தனர், அது இப்போது சாத்தியமில்லை. அக்காலத்தில் தியானம் சாத்தியமாக இருந்தது, ஆனால் இப்போது அது சாத்தியமில்லை. எனவே, யஜ்ஞைஹ் ஸங்கீர்த்தன-ப்ராயைஹ் என்று சாஸ்திரங்கள் பரிந்துரைக்கின்றன: "நீங்கள் இந்த ஸங்கீர்த்தன யக்ஞத்தைச் செய்யுங்கள்." எனவே, ஸங்கீர்த்தன யக்ஞத்தைச் செய்வதன் மூலம், நீங்களும் அதே பலனைப் பெறலாம்."
750710 - சொற்பொழிவு Initiation - சிக்காகோ