| "கிருஷ்ணர் கூறுகிறார், ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம்ʼ ஶரணம்ʼ வ்ரஜ (BG 18.66). சரணடைபவர்களுக்கு மிகவும் நல்லது. கிருஷ்ணருக்கு உங்களுடைய சேவை தேவையில்லை. அவர் "நீங்கள் என்னிடம் சரணடையுங்கள்" என்று சொல்லும் பொழுது, அவர் உங்கள் சேவைக்காக பாதிக்கப்படுகின்றார் என்று அர்த்தம் அல்ல. கிருஷ்ணர் தன்னிறைவு பெற்றவர். அவரால் உங்களைப் போல் மில்லியன் கணக்கில் வேளைகாரர்களை உருவாக்க முடியும். எனவே உங்கள் சேவை அவருக்கு அவசியம் இல்லை. ஆனால் நீங்கள் தொண்டு செய்தால், பிறகு அது உங்களுக்கு நன்மை தரும். நீங்கள் காப்பாற்றப்படுகிறீர்கள், " நான் இப்பொழுது ஒரு மிகவும் திறமையான, மேலும் ஒவ்வொரு மரியாதையுடனும், செழுமை மிக்க முதலாளியின் பாதுகாப்பின் கீழ் இருக்கின்றேன்." நீங்கள் பூனைகள், மற்றும் நாய்களுக்கு சேவை செய்கிறீர்கள். நீங்கள் ஏன் மிகவும் பூரணமான, தகுதியும் செழுமையும் பெற்ற எஜமானருக்கு தொண்டு செய்யக் கூடாது? இது நடந்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் தொண்டு செய்ய வேண்டும். நீங்கள் சொல்ல முடியாது: "இல்லை, இல்லை. நான் தொண்டு செய்யமாடேன். நான் சுதந்திரமானவன்." அது சாத்தியம் இல்லை. நீங்கள் தொண்டு செய்ய வேண்டும், மேலும் நீங்கள் குறைவுள்ள் முதலாளியால் சுரண்டப்படுவீர்கள். எனவே ஏன் குறைவற்ற முதலாளிக்கு தொண்டு செய்யக் கூடாது, அப்பொது தான் நீங்கள் மீண்டும் சுரண்டப்படமாட்டீர்கள்? அது எளிமையானது."
|