| "ஒரு மனிதனால் கிருஷ்ணரை அடைய முடியும்; நாயால் அது முடியாது. அது சிறப்புடையது. விஷய கலு ஸர்வத꞉ ஸ்யாத். (இடைவேளை)... சாப்பிடுவது, தூங்குவது, இனச்சேர்க்கை. இது எல்லா வாழ்க்கையிலும் கிடைக்கும். (இடைவேளை)... மற்றொரு பத்தி ப்ரேம-விவர்தவில் இருக்கிறது, ஜனமே ஜனமே ஸபே பிதா மாதா பாய: "எல்லா வாழ்க்கையிலும், ஒருவருக்கு தந்தையும் தாயும் கிடைக்கும்." க்ருʼஷ்ண குரு நஹி மிலே பஜஹுன் ரே பாஇ(?): "ஆனால் கிருஷ்ணரும் குருவும் ஒவ்வொரு வாழ்க்கையிலும் கிடைக்காது." அது மானிட வாழ்க்கையில் மட்டுமே. இல்லையென்றால், பிறந்தவுடனே, அங்கே தந்தையும் தாயும் இருக்கிறார்கள். ஒன்று நீங்கள் மனிதனாக மாறுங்கள் அல்லது புலி அல்லது பாம்பு அல்லது குருவியாக மாறுங்கள், அங்கே அம்மா, அப்பா இருக்கிறார்கள். ஆனால் ஆன்மீக குருவும் கிருஷ்ணரும், அது மானிட வாழ்க்கையில் பெறப்படலாம், எல்லா வாழ்க்கையிலும் அல்ல."
|