TA/750618 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் ஹானலுலு இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"சிறந்த அறிவு என்றால் எவ்வாறு கிருஷ்ண பக்தனாவது என்பது தான். அவ்வளவு தான். அதுதான் சிறந்த அறிவு; இல்லையெனில் அனைத்து செயல்பாட்டுத் துறைக்கும் அறிவுத் திறமை தேவைப்படுகிறது. அறிவுத் திறமை இல்லாமல் அவர் முன்னேற்றம் அடைய முடியாது. எனவே அறிவார்ந்த சிறந்த பயன்பாடு யாதெனில் ஒரு கிருஷ்ண பக்தனாகி மேலும் வாழ்க்கையை வெற்றிகரமானதாக ஆக்குவதாகும். அதுதான் உண்மையான அறிவுத்திறன். க்ருʼஷ்ண யே பஜே ஸே பட சதுர: கிருஷ்ண பக்தனாக யாரேனும் இருந்தால், அவன் தான் முதல் வகுப்பு மனிதன். அதுதான் வாழ்க்கையின் தீர்வு. இல்லையென்றால், நீங்கள் மிகவும் சிறந்த அறிவாளியாகுங்கள்—நீங்கள் கொஞ்சம் பணம் சேமியுங்கள், நீங்கள் கொஞ்சம் கெளரவம், கொஞ்சம் சக்தி பெறுங்கள்—பிறகு அது என்னது? இறந்தவுடன் அனைத்தும் முடிந்துவிடும்; அது தங்காது.

பிறகு நீங்கள் மற்றொரு அத்தியாயம் கொண்டு வருவீர்கள், மறுபடியும் போராட்டம்—மனிதனாக அல்லது பூனை, நாய் அல்லது மரம் அல்லது அதைப் போல். அதுதான் இயற்கையின் சட்டம், நீங்கள்அதை தவிர்க்க முடியாது."

750618 - உரையாடல் - ஹானலுலு