TA/750616c காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் ஹானலுலு இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பிரபுபாதர்: புண்யோ கந்த꞉ ப்ருʼதிவ்யாம்ʼ ச (BG 7.9). அப்படி ஒரு நறுமணம் வந்த உடனே, ஒருவர் கிருஷ்ணரை நினைவில் கொள்ள வேண்டும்: "இது கிருஷ்ணர்." புண்யோ கந்த꞉ ப்ருʼதிவ்யாம்ʼ ச (இடைவேளை) அந்த விஞ்ஞானி எங்கே? எவ்வாறு என்றால் பூமியிலிருந்து நமக்கு பலவிதமான நறுமணமும் சுவையும் கிடைக்கிறது. பழங்கள் வேறுபட்ட சுவையில், பூக்கள் வேறுபட்ட நறுமணம், ஆனால் அது எங்கிருந்து வருகிறது? பூமியிலிருந்து. எனவே இந்த விஞ்ஞானிகள் ஏன் இவற்றை எல்லாம் பூமியிலிருந்து எடுத்துக் கொள்வதில்லை?

பலி-மர்தன: அவர்கள் செய்வதெல்லாம் புகை மூட்டத்தை உருவாக்குவதாகும். பிரபுபாதர்: ஹா?

பலி-மர்தன: அவர்கள் புகை மூட்டத்தை உருவாக்குகிறார்கள். கிருஷ்ணர் நறுமணம் மிக்க பூக்களை உருவாக்குகிறார்.

பிரபுபாதர்: இல்லை, புகை மூட்டமும் கிருஷ்ணரால் உருவாக்கப்பட்டது. அதனால் பரவாயில்லை. நான் சொல்வதாவது, தரையில் அனைத்தும் உள்ளது, அந்த நறுமணம்.

ஸித்த-ஸ்வரூப: எனவே ஏன் அவர்களால் ஒன்றாக சேர்த்து வைக்கமுடியவில்லை?

பிரபுபாதர்: இல்லை, அவர்களால் ஏன் முடியாது, அறிவியல் வழி, இரசாயனம் அல்லது உடல் வழி, அவர்களால் ஏன் நறுமணத்தை பூமியிலிருந்து எடுக்க முடியாது?

பலி-மர்தன: அவர்கள் செயற்கை வாசனைகள் செய்கிறார்கள்.

பிரபுபாதர்:  இல்லை.

ஸித்த-ஸ்வரூப: அவை செயற்கை வாசனைகளாக வருகின்றன, இருந்தாலும்; அவை ஒரே மாதிரியான நறுமணம் பெறவில்லை.

பலி-மர்தன: அந்த அளவிற்கு நன்றாக இல்லை.

அம்பரீஷ: உண்மையில் அவர்கள் பூக்களிலிருந்து வாசனை திரவியம் செய்கிறார்கள்.

பிரபுபாதர்: பூக்கள், ஆம். அதாவது... ஆனால் நீங்கள் சில அழுக்கை எடுத்துக் கொண்டு, மேலும் நறுமணத்தை பிரித்தெடுக்காதீர்கள். பிறகு எனக்கு தெரியும் நீங்கள் தான் விஞ்ஞானி என்று. (சிரிப்பொலி)"

750616 - காலை உலா - ஹானலுலு