TA/750616b உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் ஹானலுலு இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"அவர்களுக்கு நீங்கள் சில ஈர்ப்பு கொடுக்காவிட்டால், அவர்கள் கிராமத்தில் உள்ள அதே ஈர்ப்பை வைத்துக் கொள்வார்கள்: அதே போதையை, மது, மாமிசம் உண்பது, சூதாட்டம். ஆகவே அவர்கள் சந்தோஷமாக இருக்கமட்டார்கள். அவர்கள் அதே விஷயத்தை இறக்குமதி செய்வார்கள், ஏனென்றால் அவர்களுக்கு வேறு எந்த ஈர்ப்பும் இல்லை. எனவே நீங்கள் எங்களுக்கு வாய்ப்பு அளித்தால், நாங்கள் அவர்களுக்கு ஆன்மீக ஈர்ப்பை அளிப்போம். நீங்கள் எங்களுக்கு அதை அனுமதித்தால், எங்களில் சிலர் சென்று அவர்களுக்கு ஆன்மீக ஈர்ப்பை அளிப்போம். மேலும் நடைமுறையில் ஹிப்பிக்கள், போதைக்கு அடிமையானவர்கள், அவர்கள் ஈர்க்கப்பட்டுவிட்டார்கள், அவர்களுக்கு இப்போழுது கிருஷ்ண பக்தி இயக்கத்தில் ஈர்ப்பு ஏற்பட்டுவட்டது, மேலும் அவர்கள் தங்களுடைய மற்ற கெட்ட பழக்கத்தை, மாமிசம் உண்பது மேலும் மது அருந்துவது மற்றும் சட்டவிரோத உடலுறவு, சூதாட்டம் அனைத்தையும் விட்டுவிட்டார்கள். இதை மறுபடியும் கிராமங்களில் அறிமுகப்படுத்தினால், அதற்கு சில ஈர்ப்பு இருக்க வேண்டும். ஏனென்றால் ஜீவாத்மாக்கள் ஆனந்த, ஸச்-சித்-ஆனந்த, பகவானின் அங்க உறுப்புக்கள். அவர்கள் நித்தியமான, அறிவு நிறைந்த ஆனந்தமான வாழ்க்கையை விரும்புகிறார்கள். அதுதான் அவர்களுடை ஏக்கம்."
750616 - உரையாடல் D - ஹானலுலு