TA/750616 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் ஹானலுலு இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கலைஞராகிய நீங்கள், ஏழு நிறங்களை கலந்து—இந்த வழியாக, நீங்கள் நிறங்களை அதிகரிக்கலாம். மேலும் ஜட இயற்கை—ஸத்த்வ, ரஜ, தமஸ். இவற்றின் குணங்களை கலப்பது இம்முறையில்தான். தமஸ் நீல நிறம், ஸத்த்வ மஞ்சள், மேலும் ரஜ சிவப்பு. இப்போது நீங்கள் மூன்றில் மூன்று என்று கலக்கவும், ஒன்பதாகும்—ஒன்பதும் ஒன்பதும் பெருக்கினால் எண்பத்தொன்று. ஆகையினால் 8,400,000 வேறுபட்ட வடிவங்கள் குணங்களின் கலப்பிற்கேற்ப. இயற்கை நன்றாகவும் துல்லியமாகவும் உள்ளது, இதன் காரணமாக ஜீவாத்மாக்கள் வேறுபட்ட உடலை பெற்றிருக்கின்றன காரணம்ʼ குண-ஸங்கோ (அ)ஸ்ய (BG 13.22). அது விவரிக்கப்பட்டுள்ளது. பல வகைகள் இருக்க காரணம், இதுவரை எனக்கு கிடைத்தது, காரணம்ʼ. காரணம்ʼ என்றால் "அதன் காரணம்." குண-ஸங்கோ என்றால் அவன் வேறுபட்ட தரங்கள் உள்ள நிறங்களின் குணங்களுடன் தோழமை கொண்டுள்ளான். அது மிகவும் அறிவியல் பூர்வமானது."
750616 - உரையாடல் B - ஹானலுலு