| "நாங்கள் தான் பொறுப்பு. ஒரு கொசுவை நாம் கொன்றாலும், நாம் தான் பொறுப்பு. அது மனிதன் இயற்றின சட்டம் அல்ல. அதாவாது "நீங்கள் ஒரு மனிதனை கொன்றால், பிறகு நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள், மேலும் நீங்கள் மற்றொரு விலங்கை கொன்றால், நீங்கள் தண்டிக்கப்படமாட்டீர்கள்." இது மனிதனால் நம் வசதிக்காக உருவாக்கப்பட்டது. "நாம் அந்த விலங்கை சாப்பிட வேண்டும்; ஆகையினால் மிருகங்களை கொல்வதற்கு தண்டனை இல்லை." ஆனால் பகவான் அனைவருக்கும் ஒரே மாதிரி தான். அனைத்து உயிர் வாழிகளும் பகவானின் அங்க உறுப்புகள். எனவே அவர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது, தண்டனை அல்லது இன்பம். நீங்கள் அவரை தொந்தரவு செய்ய முடியாது. எவ்வாறு என்றால் நீங்கள் ஒரு அபார்ட்மெண்னில் உங்கள் நிலைக்கு தகுந்படி வாழ்கிறீர்கள், ஆனால் நான் வாலுக்கட்டாயமாக உங்களை, "இந்த அபார்ட்மெண்னில் இருந்து வெளியே சென்றுவிடு," என்றால், பிறகு நான் சட்டத்தால் தண்டிக்கப்படுவேன். எனக்கு உங்களை அந்த அபார்ட்மெண்னில் இருந்து வெளியேற்ற உரிமை இல்லை."
|