TA/750615c உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் ஹானலுலு இல் வழங்கிய அமிர்தத் துளி
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "பிரபுபாதர்: அவர்கள் உச்சாடனம் செய்வதில் சேர்ந்தால், அந்த முன்னேற்றம் மிக வேகமாக வந்துவிடும். அதுதான் தேவைப்படுகிறது. அவர்கள் ஸங்கீர்தனாவில் சேர்ந்தால், பிறகு அந்த முன்னேற்றம் மிக வேகமாக வந்துவிடும். அதுதான் என்னுடைய கருத்து. எனவே நம் முதன்மையான கருத்து, அவர்களை முன்னேற விடுவதாகும். அறிவுறுத்தல்களைவிட இந்த வாய்ப்பை வழங்குவது சிறந்தது.
ஸித்த-ஸ்வரூப: ஆம். பிரபுபாதர்: இதுதான் என் கருத்து. நீங்கள் நிறுத்துங்கள் என்று நான் சொல்லமாட்டேன். ஸித்த-ஸ்வரூப: ஆம், ஆம். பிரபுபாதர்: ஆனல் அவர்களுக்கு ஸங்கீர்தனாவில் சேர வாய்ப்பு கொடுங்கள். ஸித்த-ஸ்வரூப: ஆம், ஆம், ஆம். பிரபுபாதர்: ஒருவேளை நீங்கள் ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரம் பேசிவிட்டு அவர்களுக்கு அரை மணி நேரம் உச்சாடனம் செய்ய வாய்ப்பு கொடுத்தால். இல்லை. அவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள், ஒரு மணி நேரம் உச்சாடனம் மேலும் பதினைந்து நிமிடம் பேசுவதற்கு. இந்த பேசுவது, அவர்கள் மிகவும் தீவிரமாக இல்லாவிட்டால் அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலாது. எனவே அவர்கள் பேசுவதை கேட்கட்டும், அதாவது "அங்கே இத்தகைய நல்ல பேச்சு இருக்கிறது." ஆனால் அவர்களை அதிகமாக உச்சாடனம் செய்வதில் ஈடுபடுத்துங்கள். இதுதான் தேவைப்படுகிறது." |
| 750615 - உரையாடல் D - ஹானலுலு |