TA/750615b உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் ஹானலுலு இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"வெறுமனே ஹரே கிருஷ்ணா உச்சாடனம் செய்வதின் மூலம் ஒருவர் அவருடை அனைத்து மாசுபடுதலில் இருந்து விடுதலை அடைந்து வீடுபேறு பெற்று, பரமபதம் பெற்று இறைவனிடம் சென்று அடைவார். இதுதான் கலியுகத்தின் சிறந்த நன்மை. இந்த நன்மை இல்லை... எனெவே ஒருவர் கிருஷ்ண பக்தி இயக்கத்தில் சேர்ந்தால், ஜெபித்தல், பிறகு அவர் காப்பாற்றப்படுகிறார். காப்பாற்றப்படுதல் மட்டும் அல்ல—வீடுபேறு பெற்று, பரமபதம் பெற்று இறைவனிடம் செனறு அடைகிறார். காப்பாற்றபடுவது மட்டும் அல்ல, ஆனால் அவர் வேறு ஒரு இடத்திற்கு அனுப்பப்படுகிறார், ஒரு ஆபத்தும் இல்லாத இடத்திற்கு. பதம்ʼ பதம்ʼ யத் விபதாம்ʼ ந தேஷாம் (SB 10.14.58). ஒருவர் ஆன்மீக உலகத்திற்கு மாற்றப்படுகிறார், அவர்களுக்கு, இந்த முட்டாள்தனமான், ஒவ்வொரு அடியிலும் ஆபத்து உள்ளது, அது அவர்களுக்கானதல்ல. அவர்கள் வர முடியாது. எவ்வாறு என்றால், இங்கே பெருவாரியாக பரவும் தொற்று நோய் இருக்கிறது, எனவே ஒரு குடும்பம் வேறு இடத்திற்கு பரிமாற்றப்படுகிறது. எனவே இந்த ஹரே கிருஷ்ணா உச்சாடனம் செய்வதால், கிருஷ்ணர் பாதுகாப்பான இடத்திற்கு பரிமாற்றம் செய்வார், வீடுபேறு பெற்று, பரமபதம் பெற்று இறைவனிடம் சென்று அடைவார். இது மிகவும் அழகானது."
750615 - உரையாடல் B - ஹானலுலு