TA/750614b காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் ஹானலுலு இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"அபாணி-பதோ ஜவனோ க்ரஹீத (Śvetāśvatara Upaniṣad 3.19), என்றால் "அவர், இறைவனுக்கு, கால்கள் இல்லை, கைகள் இல்லை, ஆனால் அவர் பரிசுகளை ஏற்றுக் கொள்கிறார்." அந்த "பரிசுகளை ஏற்றுக் கொள்கிறார்" என்றால் அவருக்கு கைகள் இருக்கின்றன, ஆனால் ஏன் "கால் இல்லை," "கைகள் இல்லை" என்று கூறப்படுகிறது. அப்படி என்றால், அவருக்கு பௌதிக கைகளும் மேலும் கால்கள் இல்லை. அவருக்கு கைகளும் கால்களும், இருக்கின்றன, ஆனால் அவை ஆன்மீகமானது. அதுதான் அதன் பொருள். ஸச்-சித்-ஆனந்த-விக்ரஹ꞉ (Bs. 5.1). அவருடைய உடல் நித்தியமான ஆன்மீகத்தால் ஆனது... இந்த உடல் நித்தியமானதல்ல, ஆனால் பகவானுக்கு அவருடைய நித்தியமான உடல் இருக்கிறது. பகவான் முதுமை அடைவார் என்ற கேள்விக்கே இடமில்லை, ஏனென்றால் அவருடைய உடல் நித்தியமானது. பௌதிக உடல் நித்தியமானதல்ல. அது முதுமை, நோய், பிறப்பு, இறப்புக்கு உட்பட்டது."
750614 - காலை உலா - ஹானலுலு