TA/750611 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் ஹானலுலு இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"தன-துர்மதாந்த. நீங்கள் பெரும் பணக்காரரான உடனே நீங்கள் குருடராகிவிடுகிறீர்கள்; எதைப் பற்றியும் அக்கறை கொள்ளமாட்டீர்கள். இதைத்தான் குருடர் என்கிறோம். அதுதான் இவ்வாறு விவரிக்கப்படுகிறது, தன-துர்மதாந்த. தன என்றால் செல்வங்கள். ஒரு மனிதனுக்கு அதிகமாக செல்வங்கள் கிடைக்கும் போது, அவன் குருடனாகிவிடுகிறான். தற்பெருமை மிக்கவனாகிறான்... (தெளிவற்ற) எனவே அது இயற்கையே. உங்களுக்கு போதுமான பணம் கிடைத்ததும் உடனடியாக நீங்கள் குருடராகிவிடுகிறீர்கள். ஆகையினால், பெரும் செல்வம் பெற்றிருப்பது ஆன்மீக வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு இடையூறாகும். ஒரு செல்வந்தர் நினைக்கிறார், "இது என்ன முட்டாள்தனம்? இந்த ஏழை மனிதனுக்கு பணம் இல்லை, எனவே அவன் ஹரே கிருஷ்ணா ஜெபிக்க வேண்டும்." அவன் நினைக்கிறான், "ஆ, நாம் ஜெபிக்க வெண்டியதில்லை. நமக்கு போதுமானது இருக்கிறது. இந்த மக்களுக்கு உணவு இல்லை, இருப்பிடம் இல்லை; அவர்கள் ஜெபிக்க வேண்டும்." இது குருட்டுதனம். ஹரே கிருஷ்ணா எல்லோருக்கும் தேவையானது, அது அவர்களுக்கு புரியவில்லை."
750611 - உரையாடல் - ஹானலுலு