TA/750608 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் ஹானலுலு இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"சும்மா கிருஷ்ணரின் நம்பிக்கைக்குரிய வேலைக்காரனாக முயற்சி செய்யுங்கள். உங்கள் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் போதுமான அளவிற்கு வழங்கப்படும். கேட்க வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை.

ஆகையினால் புத்திசாலியான பக்தர்கள், அவர்கள் அறிவற்ற பக்தர்களைப் போல் கேட்பதில்லை, அறிவற்ற பக்தர்கள் தேவாலயம் சென்று பகவானை வணங்கி, "எங்களுக்கு தினமும் ரொட்டி கொடுங்கள்." என்று கேட்பார்கள். அவன் பகவானின் வேலைக்காரன், மற்றும் அவன் உன்னுடைய ரொட்டியை கேட்கமாட்டான். நீ பகவானிடம் கேட்க வேண்டும். இல்லை. பகவன் மற்ற எட்டு மில்லியன் ஜீவாத்மாக்களுக்கு ரொட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். பறவைகள், மிருகங்கள், புலி, யானை, அவர்கள் தேவாலயத்திற்கு ரொட்டி கேட்டு செல்வதில்லை. ஆனால் அவர்களுக்கு அது கிடைக்கிறது. எனவே பகவான் அனைவருக்கும் உணவு கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்றால், அவர் ஏன் உனக்கு உணவு கொடுக்காமல் இருப்பாரா? அவர் வழங்கிக் கொண்டிருக்கிறார். எனவே சில ஜட பலன்களுக்காக பகவானிடம் பிச்சை கேட்டு போகக் கூடாது. அது உண்மையான பக்தி அல்ல. நாம் பகவானிடம், அவருடைய தொண்டில் எவ்வாறு ஈடுபடுவது என்று பிச்சை கேட்க செல்லலாம். அதுதான் நாம் கேட்கும் பிச்சையாக இருக்க வேண்டும்: "ஹரே கிருஷ்ணா," என்றால்... ஹரே என்றால் "ஒ பகவானின் சக்தி, மேலும் கிருஷ்ணா, ஒ கிருஷ்ணா, பகவான் கிருஷ்ணா, தயவுசெய்து உங்கள் சேவையில் நான் ஈடுபட செய்யுங்கள்." இதுதான் ஹரே கிருஷ்ணா."

750608 - சொற்பொழிவு SB 06.01.06-7 - ஹானலுலு