| "ஒரு கற்றறிந்த ப்ராஹ்மண மேலும் ஒரு நாய் மற்றும் ஒரு யானை, ஒரு பசு, ஒரு சண்டால—அவர்கள் அனைவரும், ஒரு பண்டிதவிற்கு, உண்மையிலே கற்றறிந்த நபர் ப்ராஹ்மண ஸம-தர்ஶின꞉." நீங்கள் பார்த்தீர்களா? எனவே இப்போது எவ்வாறு ஒரு கற்றறிந்த ப்ராஹ்மண அறிஞரும் ஒரு நாயும் சமமான நிலையில் பார்க்கப்படலாம்? ஆனால் அது பார்க்கப்படுகிறது. பண்டிதா꞉ ஸம-தர்ஶின꞉. அது ஆன்மீக தளத்தில், அதாவது நாம் அனைவரும் ஆன்மீக ஆத்மா. வேறுபட்ட கர்மாவால், நாம் வேறுபட்ட ஜட ஆடைகளால் மறைக்கப்பட்டிருக்கிறோம். ஒரு நாயும் ஆத்மா தான், மேலும் கற்றறிந்த ப்ராஹ்மணறும் ஒரு ஆத்மா தான். ஆனால் அவர் வேறுபட்ட உடலால் மூடப்பட்டிருக்கிறார், மற்றும் அவன் வேறுபட்ட உடலால் மூடப்பட்டிருக்கிறான். எனவே அந்த உடலை பார்க்காத ஒருவர், அவரால் அதே நிலையில் பார்க்க முடியும். ஆனால் உடலை பார்க்கும் ஒருவரால், அவரால் பார்க்க இயலாது. இதுதான் சமத்துவத்தின் அடிப்படை கொள்கை."
|