TA/750604 காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் ஹானலுலு இல் வழங்கிய அமிர்தத் துளி
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "பிரபுபாதர்: ஒரு சந்திர கிரகம், நம் வேத இலக்கியப்படி, அது தேவர்களின் இருப்பிடமாகும். மக்கள் அங்கே வாழ்கிறார்கள் தைவ காலம், பத்தாயிரம் ஆண்டுகள்.
பக்தர் (3): அவர்கள் தேவர்களின் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள்... பிரபுபாதர்: நான் அவர்களை நம்பமாட்டேன். அவ்வளவுதன். முடிந்துவிட்டது. (சிரிப்பொலி). பக்தர் (3): அவர்களால், அவர்களை பார்க்க முடியாது. பிரபுபாதர்: உங்களால் எதைப் பார்க்க முடியும், இளம் கண்கள்? உங்களால் எதைப் பார்க்க முடியும்? உங்களால் கடலின் மறுபக்கத்தில் என்ன இருக்கிறது என்று பார்க்க முடியுமா? அதனால் அங்கே ஒன்றும் இல்லை என்று பொருள்படுமா? உங்கள் முட்டாள்தனமான பார்வை. நீங்கள் ஏன் பார்பதில் நம்பிக்கை கொள்கிறீர்கள்? உங்களுடைய பார்க்கும் சக்தி, மிக, மிக வரையறுக்கப்பட்டது. நீங்கள் ஏன் பார்பதில் நம்பிக்கை கொள்கிறீர்கள்? நீங்கள் ஏன் பார்பதில் நம்பிக்கை கொள்கிறீர்கள்? அது குழந்தைத்தனம், "என்னால் பார்க்க முடியாது." உங்களால் எதைப் பார்க்க முடியும்? முதலில், நாம் இந்த இலக்கை கருத்தில் கொள்வோம். உங்களால் எதையும் பார்க்க முடியாது. பரமஹம்ஸ: ஸ்ரீலா பிரபுபாதர், மக்கள் ஆச்சரியம் அடைவார்கள், அதாவது சந்திரன், நம்மிடம் இருந்து சூரியனைவிட தொலைவில் இருக்கிறது என்பதை அவர்கள் படிக்கும் பொழுது... அவர்கள் ஐந்தாம் காண்டன் படிக்கும் போது ஆச்சரியப்படுவார்கள். பிரபுபாதர்: ஆனால் குறைந்தபட்சம், அவர்கள் அங்கே செல்ல முடியாது. இல்லையெனில், அவர்கள் ஏன் இந்த வேலையை விட்டுக் கொடுக்கிறார்கள்? அவர்களால் அங்கே போக முடியாது. அது உண்மை. அவர்கள் திட்டம் யாதெனில்... அவர்கள் சந்திரனில் கூட நிலம் விற்றுக் கொண்டிருந்தார்கள். அம்பரீஸ்: சந்திரனில் நிலம் விற்று கொண்டிருந்தார்கள்? பிரபுபாதர்: ஆம். (சிரிப்பொலி)." |
| 750604 - காலை உலா - ஹானலுலு |